குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால்
நேரு. குழந்தைகளைக் கொண்டாடிய பிரதமர் ஜவஹர்லால் நேரு
அவர்கள் பிறந்த தினம் 'குழந்தைகள்
தினமாக' கொண்டாடப்படுகிறது.
பள்ளிக் கல்வியோடு பொது
அறிவு, வலிமை, துணிவு, திறமை,
ஆராய்ச்சி என்று பலவகையான திறமைகளையும்
குழந்தைகள் பெற வேண்டும். அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக்
கொண்டால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகள் பெறுவர்களாகி, இந்தியாவை வளம் கொழிக்கும்
நாடகச் செய்வார்கள்: தலைமை ஏற்று வழி நடத்துவார்கள். அதனால் குழந்தைகளை அன்பாய் அரவணைத்து
வளர்க்க வேண்டும் என்று விரும்பினார் நேருஜி. அந்த அன்பின் பெருக்காலேயே ‘நேரு மாமா’
என்றும் அழைக்கப்பட்டார். எனவே அவர் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
நேருவின்
தந்தை
- மோதிலால் நேரு
நமது மாமா நேரு
அவர்களின் தாத்தா கங்காதர தனது
குடும்பத்தை டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு கொண்டு சென்றார். அவருக்கு பன்கிதாஸ் நந்திலால் என்ற பையன்களும்
1861 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளில் மோதிலால் நேரு பிறந்தார்.
மோதிலால் அன்னையின் வயிற்றிலிருக்கும்போதே அவரது தந்தை கங்காதர்
இறந்து விடவே, அண்ணன்களின் அன்பிலும்
ஆதரவிலும் வளரலானார்.
இளைய அண்ணன் நந்திலாலிடம்
அதிகப் பிரியம் கொண்ட மோதிலால்.
அவரது பேச்சுக்கு மாரு பேச்சின்றி வளர்ந்து வந்தார்.
மோதிலால் நேரு அவர்கள் வழக்கறிஞர்
தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததோடு
நிறைய நண்பர்களும் கிடைத்தனர்.
தமது இல்லத்திற்கு நண்பர்கள்
வந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அத்தைகைய வருகையில் ஒருநாள் வந்த நண்பர்களுக்கு
உயர்தரமான இனிப்புகளை வழங்கினார் மோதிலால் நேரு அவர்கள்.
‘என்ன விசேஷம்’ என்று
நண்பர்கள் கேட்டதற்கு தனக்கு அழகிய மகன்
பிறந்திருப்பதாக கூறினார். ஆம் நமது மாமா
நேரு அவர்கள் கி.பி.
1889 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள்
14 ஆம் நாள் மோதிலால் வீட்டில்
பிறந்தார்.
மோதிலால் நேரு அவர்கள் பிறந்த
அந்த குழந்தைக்கு ‘ஜவஹர்லால்’ என்று பெற்றோர் பெயர்
சூட்டினார். ‘ஜவஹர்லால்’ என்பதற்கு ‘அழகிய ஆபரணம்’ என்று
பொருள்.
மோதலால் நேருவும் அவரது
மனைவி சொரூப ராணி அம்மையாரும்
தனது செல்ல மகனை அன்போடும்,
ஆசையோடும், அரவணைத்து ஆனந்தமாய் வளர்த்து வந்தனர். அவருக்கு கவலை என்பதை அறியாத
வண்ணம் வளர்த்து வந்தனர்.
புத்திசாலித்தனம்
சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பந்து பக்கத்திலிருந்த மரப்பொந்தில் பொய் விழுந்தது. என்
பந்து எனக்கு வேண்டும் என்று
பந்துக்குச் சொந்தக்காரப் பையன் பிடிவாதம் பிடித்து
அழ ஆரம்பித்தான்.
பொந்துக்குள் பாம்போ தேளோ இருக்கலாமென்று
எல்லோரும் பயந்தனர். கையை விட்டு எடுக்க
முடியாத அளவுக்குப் பொந்தும் ஆழமாக இருந்தது.
உடனே இரண்டு பக்கெட்
தண்ணீர் கொண்டு வரச் சொல்லி
அந்தப் பொந்துக்குள் நீரை வூற்றினான். பொந்துக்குள்
தண்ணீர் நிறைய ஆரம்பித்ததும் பந்து
அதில் மிதந்து மேலே வந்தது.
அழுது கொண்டிருந்த பையன் சந்தோஷத்தில் துள்ளிக்
குதித்தான்.
பொந்துக்குள் தண்ணீர் வூற்றிப் பந்தை
புத்தி சாலித்தனமாக எடுத்து கொடுத்த பையன்
யார் தெரியுமா? பின்னாளில் பாரத பிரதமரான ஜவஹர்லால்
நேருதான்.
நேருவின் கல்லூரி
கல்வி:
இங்கிலாண்டத்திலுள்ள பல கல்லூரிகளில் இடம்
கிடைக்கவில்லை. கடைசியில் ஹாரோ கல்லூரியில் இடம்
கிடைத்தது. 1905 ஆம் ஆண்டு அக்கல்லூரியில்
சேர்ந்தார். அக்கல்லூரியில்தான் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்
படித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கல்லூரியில் சேர்ந்த சில நாட்களுக்கு
வீட்டு ஞாபகம் இருந்தது.
நாட்கள் செல்லச்ச்செல்ல வீட்டு
ஞாபகத்தை மறந்து மாணவர்களுடன் பழகினார்.
மற்ற மாணவர்களைவிட படிப்பில்
சிறந்து விளங்கினார்.
அப்படியிருந்தும் ‘லத்தின்’ மொழியில் தேர்ச்சி பெறாதிருந்தார். தேர்ச்சி பெறாதிருந்த அவரை மேல் வகுப்புக்கு
அனுப்புவதா? வேண்டாமா? என ஆசிரியர்கள் தயங்கினர்.
அதன் பின்னர் ‘ஜவஹர்’ பொது அறிவில்
திறம் பெற்றவற்றையிருந்தது கண்டு மேல் வகுப்பிற்கு
அனுப்பி வைத்தனர்.
அடிமைத்தளை
நாள்தோறும் நாளிதழ்களை படிப்பதை கடமையாகக் கொண்டுரிந்தார்.
அந்த நாளிதில்களின் மூலம் ஆகாயத்தில் பறக்கச்
சோதனைகள் நடப்பதைப் பற்றியும், ரஷ்யா ஜப்பான் யுத்த நடவடிக்கைகளைப் பற்றியும், இங்கிலாந்து
தேர்தல் பற்றிய விபரத்தியும், அறிவியில் சம்பந்தமான செய்திகளைப் பற்றியும் நன்கு தெரிந்து
வந்தார். அதன் மூலம் ஆசிரியர்கள் கேட்கும் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில்
அளித்து வந்தார்.
அதற்காக அவரைப் பாராட்டிப்
புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன. அந்த புத்தகங்களில் ஒன்று
‘கரிபால்டியின்’ வாழ்க்கை வரலாறு. அந்த புத்தகத்தைப்
படித்த ஜவஹருக்கு ஆங்கிலேயரிடம் அடிமைபட்டுக் கிடக்கும்பரத நாட்டை மீட்க வேண்டுமென்று
எண்ணம் அன்றே அவருள் எழுந்தது.
டிரினிடி கல்லூரியில்:
இரண்டாண்டுக் கல்லூரிப் படிப்பு முடிந்த போதும்,
தொடர்ந்து பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படிக்க
எண்ணினார். அதற்கான அனுமதி கேட்டு
தந்தைக்கு மடல் எழுதினார். சம்மதம்
தெரிவித்து வந்த மடல் கண்டு
மகிழ்ச்சி கொண்ட ஜவஹர் கேம்பிறிட்ஜ்
1907 ஆம் ஆண்டில் சேர்ந்து படிக்கலானார்.
கருத்தரங்கு:
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இந்திய மானவை சங்கம்
ஒன்று இயங்கி வந்தது. அந்த
சங்கத்தில் ஜவஹர் உறுப்பினராகச் சேர்ந்தார்.
அங்கு நடைபெற்று வந்த ‘இந்திய அரசியல்
பற்றிய கருத்தரங்குகளில் ஜவஹர் கலந்து கொண்டு
பேசிப் பழகி வந்தார்’.
தேசபக்தி:
இங்கிலாந்துக்கு வந்து சென்று கொண்டிருந்த
லாலா லஜபதிராய், கோபால கிருஷ்ணகோகலே, விபின்
சந்திரபால் போன்ற தலைவர்களுடன் தொடர்பு
கொண்டு வந்தார். தலைவர்களின் பேச்சின் மூலம் தேசபக்தி எழுச்சியுற்று
வளரத் தொடங்கியது ஜவாஹருக்கு..
சுயமரியாதை:
ஜவஹர் இங்கிலாந்தில் படித்து
வந்தபோது. வாரம் ஒருமுறை பணம்
அனுப்பி வந்தார் மோதிலால். அப்படியிருந்தும்
வாரத்தில் இரண்டாவது முறையாகப் பணம் கேட்டு மடல்
எழுதியிருந்த ஜவஹர்.
வாரத்தில் இரண்டாவது முறையாக பணாம் கேட்கும்
அளவிற்கு அப்படி என்ன செலவு
செய்கிறான் என்று நினைத்து மோதிலால்
அனுப்பிய பணத்திற்கு கணக்கு எழுதி அனுப்பும்படி
மடல் எழுதினார்.
ஜவாஹரோ. 'என் மீது நம்பிக்கை
இல்லாத பொது நான் அனுப்பும்
கனகினால் எந்த உபயோகமும் இல்லை'
என்று பதில் எழுதினார்.
வேறு வழியின்றி வாரத்தின்
இரண்டாவது முறையாக பணத்தை அனுப்பி
வைத்தார்.
சிறுவதிலேயே தன்மான உணர்வுடன் 'ஜவஹர்
இருந்துள்ளார் எண்பதுற்கு இது ஓர் உதாரணமாகும்.
இன்னர்டெம்பிள் கல்லூரியில்:
ஆம் ஆண்டு தனது
இருபதாவது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்
கழகத்தில் பி. ஏ. பட்டம்
பெற்றவர் மேற்கொண்டு என்ன படிப்பது என்று
யோசிக்கும் வேளையில் 'இ. சி. எஸ்
படித்தவர்களுக்கு உயிரந்த உத்தியோகங்கள் வழங்குவதாக
கேள்விப்பட்ட ஜவஹர்' ஐ. சி.
எஸ். படிக்க விரும்பினார். ஆனால்
இருபத்திரண்டு வயது பூர்த்தியாகி இருக்க
வேண்டும் என்று விதியின் காரணத்தினால்
'சின்னர் டெம்பின்' என்ற சட்டக் கல்லூரியில்
சேர்ந்து படித்து வரலானார்.
பாரிஸ்டர் பட்டம்:
சட்டக் கல்வியை 'ஜவஹர்'
ஒரு சடங்காகவே கற்று வந்தார் என்று
தான் சொல்ல வேண்டும். உணமையிலே
அவருக்கு அதில் ஈடுபாடு இல்லை
ஆடம்பர வாழ்க்கையில் 'ஜவஹர்' ஈடுபட்டு வந்தார்.
மற்ற மாணவர்களைபோல் 'படாடோபங்கங்களில்' தன்னை ஐக்கைபடித்துக் கொண்டு வந்தவர். ஆனால்
காலப்போக்கில் தான் செல்லும் பாதை சரியானதல்ல என்பதை உணர்ந்து திருத்திக் கொள்ளலானார்.
உல்லாச வாழ்க்கை தன்னைப் போன்ற ஒரு தேச பக்தனுக்கு உகந்ததில்லை என்பதை அவர் உணர்ந்து
தன்னை மாற்றிக் கொண்டார்.
மாணவனாகக் கல்வி கற்க. மேற்படிப்புக்காக மேல்
நாடு சென்ற ஜவஹர் இளஞ்சிங்கமாக வாலிபனாக ஒரு இந்திய தேச விடுதலைச் சிற்பியாக சிறந்த
கல்விமானாக அறிஞனாக பாரிஸ்டர் பட்டம் பெற்றவராக 1912 ஆம் ஆண்டு தமது இருபத்திரண்டாவது
வயதில் இந்திய மண்ணிற்குத் திரும்பினார்.
தந்தை மோதிலாலின் ஏற்பாட்டின்படி ஐரோப்பிய உடையில்
ஒரு அழகான குதிரையில் தந்தியின் பின்னால் அமர்ந்து சிரித்த முகத்தோடு ஆனந்த பவனத்திற்கு
வந்த ஜவஹரை அந்த பவனத்திலிருந்த ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் வெளையாட்கள் என அனைவரும்
உற்சாகமாக வரவேற்றார்.
சிறந்த வலக்கைறிஞராக:
மோதிலால் நேரு தனது மகன்
'ஜவஹரை' ஒரு சிறந்த வழக்கறிஞராக
ஆக்க விரும்பினார். அதற்கான வழிமுறைகளை எல்லாம்
எடுத்து கூறினார்.
ஜவஹர்லால் நேருவுக்கு தன் தந்தையுடன் சேர்ந்து
சட்டத் தொழிலை மேற்கொண்டார். ஆரம்பத்தில்
மிக ஆர்வத்துடன் அவர் ஈடுபட்டிருந்தாலும் நாளடைவில்
அந்தத் தொழிலில் உற்சாகம் குறைந்து கொண்டே வந்தது. அதற்குக்
காரணம் இங்கிலாந்தில் இருந்தபோது இந்திய மக்கள் சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது செய்தித் தாள்கள்
மூலமும் இந்தியத் தலைவைகள் மூலமும் அறிந்திருந்தார். அந்த
எண்ணத்துடனேயே இந்தியா வந்திருந்ததினால் மனா
அமைதிக்காக அலகாபாத் நீதிமன்றத்தில் வலதறிஞர் தொழில் செய்தாரேயன்றி அத்தொழில்
அவரகுப் பிடிக்கவில்லை.
அரசியலில் நாட்டம்:
அதற்குத் தகுந்தாற்போல் 1912 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் பங்கியூரில் மாநாடு நடந்தது. அதில்
ஜவஹர்லால் நேருவும் ஒரு பிரதிநிதியாகக் கலந்து
கொண்டார். இனி 'ஜவஹரை' நேரு
வென்றே அழைப்போம்.
1913
ஆம் ஆண்டு 'நேரு' காங்கிரசில்
சேர்ந்தார்.
ஹோம் ரூல்:
அந்நாளில் திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் ஹோம் ரூல் என்ற
இயக்கத்தை தொடங்கினர்.
இந்த இயக்கம் நேருவைக்
கவர்ந்திடவே அந்த இயக்கத்தில் கலந்து
கொண்டு தீவிரமாக தொண்டுகளை செய்து வந்தார்.
முதல் உலகப்போர் 1914 ஆம்
ஆண்டு ஆரம்பமானது. இதனையே காரணமாக கொண்டு
ஏகாதிபதியாக் காரர்கள் இந்தியத் தற்காப்புச் சட்டத்தை ஏற்படுத்தி நாட்டில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சிகளை
அடக்கி வந்தனர். இந்தியத் தற்காப்புப் படையொன்றையும் அமைத்தனர்.
நேருவின் முதல்
உரை:
1915
ஆம் ஆண்டு அலகாபாத்தில் 'சாப்ரூ'
என்பவரின் தலைமையில் பத்திரிக்கை அடக்குமுறை எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட நேரு ஆங்கிலத்தில் சுருக்கமாக
பேசினார். அதில் கருத்து நிறைந்திருந்தது.
நேரு பேசிய முதல்
மேடைப் பேச்சாக அது அமையவில்லை.
மக்கள் ஆரவாரம் செய்து அவர்
உரையை ஆதரித்தனர். அதைக்கண்ட 'சாப்ரூ' நேருவைக் கட்டிச்
சேர்த்து பிடித்து உணர்ச்சி தழும்பு தழுவிக் கொண்டார்.
காந்திஜியைச் சந்தித்த
நேருஜி:
1916
ஆம் ஆண்டு லட்சுமணபுரியில் காங்கிரஸ்
மகா சபை கூடியது. அப்போதுதான்
காந்திஜியை முதல் முதலாகச் சந்தித்தார்
நேருஜி.
தென்னாபிரிக்காவில் காந்திஜி செய்திருந்த மேலான சேவைகளை முன்பே
அறிந்திருந்தார் நேருஜி.
நேருவின் திருமணம்:
தனது மகன் நேரு
வக்கீல் தொழிலையும் விட்டு வீட்டுத் தீவிரமான
அரசியில் வாதியாக இருந்து வருவதைக்
கண்ட தந்தை மோதிலால். அவருக்கு
ஒரு கால் கட்டுப் போட்டுவிடத்
தீர்மானித்தார்.
அதற்கான பெண் தேடும்
படலத்தைத் தொடங்கினர். காஷ்மீரைச் சேர்ந்த கமலாகெளல் தனது
மகனுக்கேற்ற பெண் என்ற தீர்மானத்திற்கு
வந்தார்.
பெண் காஷ்மீரைச் சேர்ந்தவள்
என்றாலும் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து
வந்துது டில்லி.
திருமண விழா டில்லியில்
கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் வெகு
விமர்சையாக நடைபெற்றது.
1916
ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
8 ஆம் நாள் (நேருவுக்கு 26 வயதிலும்
கமலாவுக்கு 16 வயதிலும்) திருமணம் இனிதே நடந்தேறியது. தம்பதியினர்
ஒருவரை ஒருவர் மனதார நேசித்தனர்.
தன் கணவருக்குத் தன்னையே அர்பணித்துக் கொண்டார்
கமலா.
மகள்- இந்திரா
பிரியதர்ஷினி:
நேரு- கமலா இல்லறத்தின்
விளைவாக 1917 ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் 19 ஆம் நாளன்று பெண்
குழந்தையொன்று பிறந்தது.
அந்த குழந்தைக்கு 'இந்திரா
பிரியதர்ஷினி' என்று பெயர் சூட்டினார்.
இந்திரா என்பது மோதிலால்
நேருவின் தாயரின் பெயர். பிரியதர்ஷினி
என்பது அழகானவள். இரண்டையும் சேர்த்து 'இந்திரா பிரியதர்ஷினி' என்ற
பெயர் உருவானது.
முழு அரசியலில்
நாட்டம்:
பொது வாழ்க்கையில் அதிக
ஈடுபாடு கொண்டிருந்த நேரு தன் வக்கீல்
தொழிலை கைவிட்டுவிட்டு தீவிரமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.
அந்தச்சமையம் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் வழுதிருந்து 1918 ஆம் ஆண்டு 'மான்டெடு
ஜேம்ஸ் போர்டு' அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையின் கருத்துத்
தாக்கத்தினால் கலவரம் ஏற்பட ஆரம்பித்தது.
காங்கிரசாரிடையே பிளவு ஏற்பட ஆரம்பித்தது.
மிதவாதிகள் காங்கிரசிலிரிந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தனர்.
மிதவாதிகளின் போக்கு நேருவை கோபமடையச்
செய்தது. அவர்களுடன் நேரு சேரவில்லை.
மிதவாதிகளின் 'திலீடர்' என்ற பத்திரிகைக்கு போட்டியாக
1919 ஆம் ஆண்டு 'தி இன்டி
பெண்டண்ட்' என்ற பத்திரிகையை நேரு
துவங்கினார்.
அதே ஆண்டு மார்ச்
18 ஆம் நாளில் 'டௌலட் சட்டம்'
அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தினால் இந்தியர்கள்
மிகவும் வதைப்பட்டனர். இதனை எதிர்த்து காந்திஜி
நாடு முழுவதும் 'பந்த்' நடத்த திட்டமிட்டார்.
நேருவும் மற்ற தலைவர்களும் இதனை
வரவேற்றனர். மார்ச் 30 ஆம் நாள் 'வெள்ளையனே
வெளியேறு' என்ற முழக்கத்துடன் 'பந்த்'
தொடங்கி ஓவர் ஒரு வாரம்
நீடித்தது.
அந்நியத்துணி பகிஷ்கரிப்பு:
ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடர்ந்து அந்நியத்துணி பாகிசுப்பறிப்புப் பொருள்களையும் பகிஷ்கரித்ததோடு தீயிட்டு எரித்தனர்.
ஐரோப்பிய உடைகளையே விரும்பி அணிந்து வந்த மோதிலால்
நேருவும் ஜவாஹர்லால் நேருவும் கதராடைக்கு மாறினார்கள்.xxxx
இரண்டாவது முறையாக
சிறை:
ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை சிறையிலிருந்து
விடுதலை செய்த போதும் மோதிலால்
நேருவை மட்டும் விடுதலை செய்யவில்லை.
சிறையிலிருந்த தந்தையைக்காண 'லக்னோ' சிறைக்குச் சென்ற
நேருஜியை துணி வியாபாரிகளைப் பயமுறுத்தி
கலகம் செய்யத் தூண்டியதாக ஆங்கிலேயப்
போலீசார் கைது செய்தனர்.
வக்கீல் வைத்து வாதாடவோ தீர்ப்பை எதிர்க்கவோ
நேருஜி மறுத்தார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தனது பக்கமே நியமிருப்பதாக வாதாடினார்.
பையமுறுத்தலின் போதிலும் பயங்கரவாதத்தினாலும் மக்களை அடக்கி விட முடியும் என்று எண்ணுவதும்
சரி அவர்களை உங்களின் விசுவாசிகளாக ஆக்கி விடவும் முடியாது. அன்பு என்பது இதயத்தின்
அடித்தளத்திலிருந்து எழ வேண்டும். அதை விலை கொடுத்து வாங்க முடியாது. துப்பாக்கியைக்
காட்டிப் பயமுறுத்தவும் முடையது.
எண்ணைப் பொறுத்தளவில் இந்திய தேச விடுதலைக்காகப்
போராடுவதை தனக்குக் கிடைக்கும் கெளரவம் என்றும் நேருஜி கூறினார்.
இதைக்கேட்ட நீதிமன்றம் நேருஜிக்குக் பதினெட்டு
மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. இரண்டாவது முறையாக 'லக்னோ' சிறையில் அடைக்கப்பட்டார்.
புகை பிடிப்பதை நிறுத்தினார்:
அந்த சிறையில் ஏராளமான
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாதம் ஒரு முறை
மட்டுமே உறவினர்கள் வந்து கைதிகளைப் பார்க்க
அனுமதிக்கப்பட்டார்கள்.
பல்வேறு குற்றங்களைப் புரிந்து
தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்ட
அறையில் நேருஜியும் அடைக்கப்பட்டார். அதனால் நேருவின் உடல்
நலம் பாதிக்கப்பட்டது. அடிக்கடி அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததே அதற்கான
காரணமாகவும் தெரிந்தது. நெஞ்சு வழியினைப் போக்கிட
ஒரேவழி புகை பிடிப்பதை நிறுத்துவதே
என்று முடிவுக்கு வந்தார். அன்றிலிருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை
அடியோடு நிறுத்தினர்.
சிறைப் பறவை:
நேரு வெளியிலிருந்த நாட்களைவிட
சிறைக்குள் இருந்த நாட்களே அதிகம்.
அந்த அளவிற்கு பற்பல போராட்டங்களில் ஈடுபட்டதின்
பேரில் அடுத்தடுத்து சிறை சென்றார். தண்டனைகளை
அனுபவித்தார். அவரை 'ஒரு சிறைப்
பறவை' என்றே அக்கால தேசியத்
தலைவர்கள் கூறி வந்தார்கள்.
1923
ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
ஆம் நாளன்று சிறையிலிருந்து விடுதலையான
பின்னர் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அமிர்தசரஸில் நடந்த அடக்கு முறை
சம்பந்தமாகப் பேசுவதற்காக சென்றார். அந்த இடத்திலேயே நேருவைக்
கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.
விசாரித்த நீதிபதி 'நாபா' சிறையில் அடைக்க
உத்தரவிடுகிறான் என்று தமது தீர்ப்பில்
கூறினார்.
இவ்விதம் ஒன்பது தடவை நேரு
சிறியிலடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 3262 நாட்கள் சிறைத் தண்டனை
அனுபவித்தார்.
இந்த வழியில் பார்க்கும்
பொது 'சிறைப் பறவை' என்பது
பொருத்தம் தானே.
தீமையிலும் ஒரு நன்மை:
சிறை வாழ்க்கை என்பது
நேருவுக்கு தீமையிலும் ஒரு நன்மை என்றுதான்
சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு புகைப்
பழக்கத்தை விட்டு விடச் செய்தது.
யோகாசனப் பயிற்சிகளைச் செய்ய வைத்தது.
புத்தகங்கள் பத்திரிகைகளை ஏராளமாகப் படிக்க வைத்தது. பற்பல
குற்றவாளிகளுடன் பழக வாய்ப்பு அளித்தது
நூல்கள் சிலவற்றை எழுத வைத்தது.
சிப்பாய்களின் காலவரலாறுகள்- உலக வரலாற்றின் அடிப்படை
புனித ரோமானிப் பேரரரசு
சுய சரிதை மற்றும்
டிஸ்கவரி ஆஃப் இந்தியா போன்ற
வரலாற்று மிக்க நூல்களை வெளியிட்டார்.
தியாகமே உருவான நேரு
எல்லவிதத் துன்பங்களையும் நாட்டு விடுதலைக்காக ஏற்றுக்
கொண்டார். எந்தவித கடுமையான தண்டனைகளையும்
நாட்டு விடுதலைக்காக சிரித்த முகத்தோடு ஏற்றுக்
கொண்டார்.
படுத்த படுக்கையானார்:
நேருஜி சிறையிலிருந்து விடுதலை
பெற்று ஆனந்த பவனத்திற்கு வந்தவுடன்
உடல் நலக்குறைவாக படுத்தார்.
அந்த அளவிற்கு சிறைக்கொடுமை
அவரது உடலைப் பாதிக்க வைத்திருந்தது.
அதனால் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே செல்ல
இயலவில்லை.
அந்த சமையத்தில் காங்கிரஸ்
பொதுக் கூட்டங்கள் மாநாடுகள் பல நடந்தன. அவைகளிலெல்லாம்
கலந்து கொள்ள முடியாத அவர்
தன்னுடைய கருத்துக்களை எழுதி அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்:
நாட்டுக்கு முழுச் சுதந்திரத்தை காந்திஜியின்
அஹிம்சை போராட்டம் பெற்றுத்தரும் என்று நேருஜி உறுதியாக
நம்பினார்.
1923
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில்
மூன்று பொதுச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்
பட்டனர். அதில் ஒருவர் நேருஜி.
கட்சிக்காக அவர் தினமும் பதினைந்து
மணிநேரம் வரை உழைத்தார்.
இந்த உழைப்பின் பேரில்
கட்டிய மனைவி கமலாவையும் கூட
கவனிக்கத்திருந்தார். அதனால் 1925 ஆம் ஆண்டு கமலாவின்
உடல்நிலை மோசமானது.
வெளி நாடுகளில் வைத்தியம்:
மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேருஜி தன் மனைவியையும்
மகள் இந்திரா ப்ரியதர்ஷினியையும் அழைத்துக்கொண்டு
சுவிற்சர்லாந்தித்துக்கு போனார்.
அங்கு ஓராண்டு தங்கியிருந்து
மனைவிக்கு மருத்துவம் பார்த்தார்.
அடுத்த ஆண்டு ஜெனீவாவுக்கு
சென்றார். அங்கும் மருத்துவம் பார்த்தார்.
மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் கமலாவின் உடல்
நலம் மோசமாகிக் கொன்டே வந்தது. அதற்காக
'மாண்டானா' என்ற மலைவாச ஸ்தலத்தில்
உள்ள மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க மருத்துவர்கள் ஆலோசனைக்
கூறினார்கள். அங்கு சென்றதும் கமலாவின்
உடல் நலத்தில் சிறிது முன்னேற்றம் கண்டது.
நேருஜியின் மனதில் சிறிய உற்சாகம்
ஏற்பட்டது. அதனால் மனைவியையும் மகளையும்
அழைத்துக்கொண்டு பிரான்ஸ் ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய
நாடுகளுக்கு சென்றார்.
ஆங்கிலேய அரசினரால் நாடு கடத்தப்பட்ட இந்திய
தலைவர்களை பல நாடுகளில் சந்தித்துப்பேசி
திட்டங்களைத் தீட்டினர்.
1927
ஆம் ஆண்டு பிரேசில் அனைத்துலக
அடக்கப்பட்ட நாடுகளின் பேரவையின் மூலம் நடைபெற்ற கூட்டத்தில்
இந்தியப் பிரதிநிதியாக அப்பேரவையில் கலந்து கொண்டார்.
அத்தோடு 'ஏகாதிபத்திய எதிர்ப்பு லீக்' கூட்டத்திலும் கலந்து
கொண்டார். இவைகளின் மூலம் அரசியலில் பல்
நுணுக்கங்களை அறிந்து கொண்டார்.
இந்தியாவிற்குத் திரும்பினார்கள்:
மாஸ்கோவில் நவம்பர் மதம் ரஷ்யப்புரட்சியின்
பத்தாவது ஆண்டு விழா நடைபெற
இருந்தது.
அந்த ஆண்டு விழாவிற்கு
மோதிலால் நேருவுக்கும் ஜவாஹர்லால் நேருவுக்கும் அழைப்பு வந்தது.
அழைப்பினை ஏற்று ஜவஹர் குடும்பமும்
மோதிலால் நேருவும் மாஸ்கோ சென்று ஆண்டு
விழாவில் கலந்து கொண்டு இங்கிலாந்திற்கு
திரும்பி வந்தனர்.
இந்த நிலையில் கமலாவுக்கு
உடல் பூரணகுணம் அடைந்திருந்தது. இனியும் வெளிநாட்டிலிருந்து சிகிச்சைப்பெற
இயலை என்ற நிலையில் அனைவரும்
இந்தியாவுக்குத் திரும்பினார்கள்.
பூரண சுயவுரிமை பெறுவது:
ஆனந்தபவனத்தில் மனைவி மகளை விட்டுவிட்டு
நேருஜி நேராக சென்னைக்கு வந்தார்.
டாட்டர் அன்சாரியின் தலைமையில்
நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு நேருஜி
வெகு நேரம் பேசினார். பேச்சின்
முடிவில் பல தீர்மானங்கள் கொண்டு
வந்தார். அவற்றின் வொன்று 'பூரண சுய
உரிமை பெறுவதே காங்கிரஸ் கொள்கை'
என்ற தீர்மானம்.
சைமன் கமிஷன்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக
இருந்த நேருவை காந்திஜியே ஒரு மாநாட்டில் முன்மொழிந்து அதன் தலைமை பொறுப்பினை ஏற்க
வைத்தார்.
தலைமைப் பொறுப்பினை எதிருக் கொண்ட பின்னர் எந்த
சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமலும் கட்சிக்குள் நிலவிய மணக் கசப்புகளை நீக்கி ஒற்றுமை
ஓங்கிட ஓடியாது உழைத்தார். சமாதான முறையில் சமரச அடிப்படியில் எதிரி களையும் தன்வசமிழுக்கும்
நுட்பத்தையும் எளிமையான போக்கினையும் மதி நுட்பத்துடன் கையாண்டு வந்தார்.
'சைமன் கமிஷன்' இந்தியாவிற்குள் வருவதை 'லக்கே'
நகரில் மக்களோடு மக்களாக நின்று போராடினார். அதன்பொருட்டு ஆங்கிலயப் போலீசார் நடத்திய
தடியடிகளில் நேருவும் சிக்குண்டார். அவரது மூக்கிலும் தடியடிகள் விழுந்தன. அந்நிலையிலும்
நிலை குலையாமல் மக்களோடு மக்களாக நின்று போராடி வந்தார்.
கோபங்கொண்ட ஆங்கிலயப் போலீசார்கள் லததிக் காம்புகளால்
கண்டபடி நேருவைத் தாக்கினார்கள். லத்தி அதிகளைத் தாங்காத நேரு உணர்வு இழந்து கீழை விழுந்தார்.
அவரது உடலிலிருந்து ரத்தம் கொட்டிடச் செய்தது.
அப்படியிருந்தும் எதிரிகளைத் தங்கிட முனையவில்லை.
இந்தப் போராட்டத்தில் நேருவின் உறுதி அவர் மக்களை வழி நடத்திச் சென்ற முறைகள் அகிம்சை
மீது அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டு நேருவைப் பாராட்டினார் காந்திஜி.
இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வாங்கித்தர நேருவைத் தன் கருவியாகத் தேர்ந்தெடுத்துக்
கொண்டார் காந்திஜி.
வீர உரை:
1929
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவர் நேருவின் பேச்சு
எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
இநித்யாவும் அதன் நட்பு நாடுகளும்
சேர்ந்து ஐரோப்பாவின் காலணி ஆதிக்கத்துக்கு முடிவு
காட்டும் நாள் நெருங்கி விட்டது.
சுதந்திரத்தைப் பெற்ற பின்னர் இந்திய
மக்கள் நாட்டில் நல்ல ஜனநாயக நெறிமுறைகளையும்
தேசியப் பாதைகளையும் வகுத்துக் குள்ள வேண்டும்.
ஏழ்மை வறுமை ஏற்றத்தாழ்வு
ஜாதிபேதங்கள் மக்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும். அடிமைகளாகக் கோழைகளாக வால்வதைக் காட்டிலும் வன்முறை வரவேற்கத்தக்கதே என்று
உரையேற்றினார்.
பகிஷ்கரிக்க வேண்டும்:
உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்காக
காந்திஜி தண்டியாத்திரை போனபோது 'உப்புச் சத்தியாகிரகம் மட்டுமல்ல
ஆங்கிலேயர் பிறப்பிக்கும் எல்லா உத்ரவுகளையும் பகிஷ்கரிக்க
வேண்டும்' என்று பிரச்சாரம் செய்து
நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வந்தார்.
அத்துடன் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல்
14 ஆம் நாள் ரெய்ப்பூரில் நடக்க
இருந்த 'சத்யாக் கிரகிகளின் மாநாட்டில்'
கலந்து கொள்ள நேரு புறப்பட்டார்.
உப்புச் சட்டத்தை மீறியதால் ஆங்கிலயப் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆறு
மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி
உத்தரவிட்டார்.
அக்டோபர் மாதம் 14 ஆம் நாளில் விடுதலை
செய்யப் பட்ட பின்னர் வீட்டிற்கு
கிளம்பிய நேருவை ஐந்தாவது மறையாகக்
கைது செய்து மீண்டும் சிறியிலடைக்கப்பட்டார்.
மோதிலால் தலைவரானார்:
நேரு சிறையிலடைக்கப்பட்ட பின்னர்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மோதிலால் நேரு
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'இந்திய நாடு சுதந்திரம்
பெரும் வரை போராட்டங்கள் தொடரும்'
என்று அறிவிப்பு செய்தார்.
கடிதங்களின் தொகுப்பு:
அந்த சிறைவாசத்தை நேரு
மிகவும் பயனுள்ளதாக மாற்றினார் அதாவது
தான் அறிந்த உண்மைகளையும் தாம் ரசித்த நிகழ்வுகளைப்
பற்றியும் அவர் நாட்டுக்கு கூற விரும்பும் விஷங்களையும் அறிவியல் உண்மைகளையும் பரிணாம
வளர்ச்சிகளைப் பற்றியும் கடிதங்களாக தனது மகள் 'இந்திரா ப்ரியதர்ஷினிக்கு' அனுப்பினார்.
அத்தகைய கடிதங்களின் தொகுப்புகள்தான்
‘letters from a father to his daughter’ என்ற நூலாக பின்னாளில் வெளிவந்தது.
கமலா கைதானார்:
நேரு போராட்டத்தில் ஈடுபட்டபோது
உடல் நலம் தெரிய அவரது
மனைவி கமலாவும் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பொருட்டு 1931 ஆம் ஆண்டு ஜனவரி
1 ஆம் நாளன்று கமலாவும் கைது
செய்யப்பட்டார்.
மோதிலாலின் மறைவு:
சிறை வாழ்கை தனது
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் சுகவீனம் அடைந்திருந்த மோதிலால் தனது மோசமான உடல்
நிலையையும் பொருட்படுத்தாமல் தன மகன் நேருவைக்
காண்பதற்காக 'நைனிடாஸ்' சிறைக்குச் சென்றார்.
தந்தை மோதிலலைப் பார்த்த
நேருஜி மிகவும் அதிர்ந்து போனார்.
தந்தையின் மகத்தில் 'மரணக்களை' தெரிந்தது. தன்னை விட்டு தந்தை
உயிரிழந்து விடுவாரோ என அஞ்சினார். மகனது
முகக் கவலையை அறிந்த மோதிலால்
எனக்கு ஒன்றும் ஆகாது நீ
தைரியமாக இரு என்று ஆரத்தழுவி
உச்சி முகர்ந்து விட்டுச் சென்றார்.
நேரு விடுதலையானவுடன் மரணப்படுக்கையில்
இருந்த தந்தையைக் காண தானும் தன
மனைவி கமலாவும் வேகமாக ஆனந்தபவனம் சென்றனர்.
இருவரையும் மகிழ்வுடன் வரவேற்ற மோதிலால் தன அருகில் அமர்ந்திருந்த
காந்திஜியைப் பார்த்து நான் மரணத்தின் அருகாமையில்
இருக்கிறேன் நீங்கள் வெற்றியின் அருகே
இருக்கிறீர்கள் கூடிய சீக்கரம் நமது
நாடு சுதந்திர நாடாகும்.
மரணத்தின் வாயிலிலும் அவருக்கு நாட்டைப்பற்றிய நினைவுதான்.
எப்படியும் தந்தையைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணிய நேரு
'லக்னோ' மருத்துவமணிக்குக் கொண்டு சென்றார்.
அங்கு சிகிச்சை பலன்
ஏதுமின்றி 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி
6 ஆம் நாள் அதிகாலையில் இவ்வுலக
வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.
(அன்றே அவரது இறுதி
சடங்குகள் கங்கை ஆற்றின் கரையில்
முடிந்தது. நேரு தந்தைக்கு செய்ய
வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து முடித்தார்.)
மனைவி சொரூபராணியும் மகன்
நேருவும் கதறிக்கதரி அழுதனர்.
சோகம் தாங்கமுடியாத மக்களும்
அழுதனர்.
காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்தவர்கள் இரங்கல் கூட்டங்களை நடத்தினார்.
கடலென மக்கள் ஆனந்தபவனத்தில்
வந்து கூடினார்.
ஆனந்த பவனத்திலிருந்து ஆறு
கீ. மீட்டர் தூரத்தில் உள்ள
கங்கைக்குக் மோதிலால் நேருவின் பூத உடலை எடுத்துச்
சென்றனர்.
நேருஜி தனது தந்தைக்கு
இறுதிச் சடங்குகளைச் செய்தார். கண்களில் கண்ணீர் சொட்டச் சிதைக்குத்
தீ மூட்டினார்.
காந்திஜியும் மதன்மோகன் மாளவியாவும் உருக்கமாக உரை நிகழ்த்தினார்கள். மக்கள்
சோகத்துடன் திரும்பினர்.
இலங்கையில் ஓய்வு:
சிறை வேதனை தந்தையின்
மரணம் போன்ற பல அழுத்தத்தால்
நேருவுக்கு அடிக்கடி தலைவலியும் நரம்புக் கோளாறும் ஏற்பட ஆரம்பித்தன.
அதற்காக இலக்கை சென்றார்.
இலங்கையில் இயற்கைச் சூழ்நிலை அவருடைய மனத்திற்குச் சற்று
ஆறுதளித்தது.
தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் அவருக்கு அங்கு பணியாற்றி வந்தவர்கள்
காய்கறிகளையும் மலர்க் கொத்துக்களையும் வெண்ணெயையும்
பரிசாக வழங்கி வந்ததை அங்குள்ள
வைத்திய சாலைகளுக்கும் அநாதை இல்லங்களுக்கும் அளித்து
வந்தார்.
காந்தி- இர்வின் ஒப்பந்தம்:
புதிய வைஸ்ராய் 'இர்வின்
பிரபு' தேசிய காங்கிரசுடன் தொடுர்பு
வைத்துக் கொள்ள விரும்பினார். அதனால்
1931 ஆம் ஆண்டு 17 ஆம் நாளன்று பேச்சுவார்த்தைக்கு
வரும்படி செய்தி அனுப்பினார். காங்கிரஸ்
செயற்குழு டில்லி சென்றது. காந்தி
சமரசமான முறையில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் பேசி வந்தார்.
இந்த செயல் நேருவை
ஆத்திர மூட்டிடச் செய்தது. காந்தி- இர்வின் ஒப்பந்தம்
மார்ச் 5 ஆம் நாளன்று கையெழுத்தானது.
காந்தியின் சம்மதம் அறிந்து நேருவுக்கு
கவலை உண்டானது. நேருவின் முகக் குறிப்பறிந்து காந்தி
அவரைச் சமாதானப்படுத்தினர்.
நேரு- காந்தி இருவருக்கும்
இடையே அரசியலில் கருத்து பேதமிருந்தாலும் அவர்களின்
சுமூகமான உறவு ஒருபோதும் பாதிக்கவில்லை.
வட்டமேஜை மாநாடு:
இர்வின் பிரபுவின் பதிவிக்கலாம்
மடிந்த பின்னர் வெலிங்டன் பிரபு
புதிய வைஸ்ரயாகப் பதவி ஏற்றார். காந்திஜியை
வற்புறுத்தி வட்டமேஜை மாநாட்டிற்கு வரும்படி அழைத்தார்.
அதனை அறிந்த நேருஜி
மும்பை வரை சென்று காந்திஜியை
இலண்டனைக்கு செல்ல வழியனுப்பி வைத்தார்.
பெருங்கிளர்ச்சி:
காந்திஜி இந்தியாவை விட்டுச் சென்றவுடன் ஆங்கிலேய அரசு இந்திய மக்களுக்கு
தொல்லைகளைத் தரத் தொடங்கியது.
வடமேற்கு மாகாணத்திலும் வங்காளத்திலும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. ஐக்கிய மாகாணக் குடியானவர்களும்
தொல்லை தள்ளாமல் பெருங் கிளர்ச்சி செய்ய
முனைந்தனர். அதன் பொருட்டு நேரு
சிறியிலடைக்கப்பட்டார். சிறியிலடைக்கப்பட்டவாறு வெளியில் நடைபெறும் சம்போவங்களை எல்லாம் நேரு அவ்வப்போது
அறிந்து வந்தார்.
நேருவின் தாயார் சொரூபராணியார் அலகாபாத்
எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதனை
அறிந்த போலீசார் சொரூபராணியாரை லத்திக் கம்பைக் கொண்டு
தலையில் தாக்கியத்தின் பேரில் ரத்தம் கசிந்தவாறு
நடுவீதியில் விழுந்து விட்டார். விழுந்த சொரூபராணியாரை போலீசாரே
ஆனந்தபவனத்துக்குக் கொண்டு சேர்த்தனர்.
தாயன்பு:
சொரூபராணிதார் அடிபட்ட இரண்டாவது நாளில்
தலையில் பெரிய கட்டுடன் நேருவைக்
காணச் சிறைச் சாலைக்கு வைத்தார்.
நேருவுக்கு ஆறுதல் மொழிகளிக் கூறினார்.
தம்முடைய துன்பத்தில் தமது தாயும் பங்கு
கொண்டது குறித்து தாயன்பை வியந்தார் நேரு.
தங்கையின் திருமணம்:
அன்னை சொரூபராணியின் உடல்
மிகவும் பாதிக்கப்பட்டுப் படுத்த படுகையில் இருப்பதாகச்
செய்தி அறிந்த போலீசார் நேருவை
விடுதலை செய்து அலகாபாத்துக்கு அனுப்பினார்.
ஊர்ப் போய்ச் சேர்ந்த அவர்
தாயின் அருகேயிருந்த பணிவிடைகளை செய்து வந்தார்.
நேருவின் இளைய தங்கை கிருஷ்ணாவுக்குத்
திருமணம் ஏற்பாடாகிருந்தது. ஆனால் அன்னையரின் உடல்
மோசமான நிலையிலேருந்து. இருப்பினும் நாட்டின் நிலைமை மோசமாக இருந்ததினால்
திருமணத்தை சிக்கனமாக முடித்து வைத்தார்.
பூகம்பம்:
1932
ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம்
நாளன்று மாலை நேருவும்- கமலாவும்
கொல்கத்தா செல்ல ரயில் நிலையத்திற்கு
சென்றனர். அங்கே பீகாரில் பூகம்பம்
ஏற்பட்டதாக கேள்விப்பட்ட நேரு மற்ற அலுவல்களை
யெல்லாம் ரத்து செய்துவிட்டு உடனே
கமலாவை ஆனந்தபவனத்திற்கு அனுப்பிவிட்டு பீகாருக்கு சென்று அங்குள்ள பாதிக்கப்பட்ட
மக்களளுக்கு பாபுராஜெந்திரப்ரசாத்துடன் இணைந்து ஆறுதல் கூறியதோடு
இடிபாடுகளில் சிக்கியர்வர்களை தானே மண்வெட்டி கொண்டு
ஆயிரம் தொண்டர்களுடன் நிவாரணப் பணிகளை செய்தார்.
இரண்டு வாரங்கள் நிவாரணப்
பணிகளில் ஈடுபட்டுவிட்டு ஆனந்தபவனத்துக்கு வந்த அவர் 1932 ஆம்
ஆண்டு பிப்ரவரி மதம் 12 ஆம் நாள்
மீண்டும் கைது செய்யப்பட்டார். ஏழாவது
தடவையாக சிறை சென்றார்.
கமலாவின் உடல்
நிலை:
இந்த நிலையில் ஆனந்த
பாவனத்திலிருக்கும் கமலாவுக்கு உடல் நிலை சரி
இல்லையென்று செய்தி வந்தது. அந்த
செய்தி அவரை இரவு பகல்
தூக்கமில்லாமல் செய்தது.
கமலாவின் உடல் நலக்குறைவின் காரணமாக
1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம்
நாளன்று நிபந்தனையின் பேரில் நேரு சிறையிலிருந்து
விடுவிக்கப்பட்டார்.
அதனைப் பயன்படுத்தி அலகாபாத்
சென்று மனைவி கமலாவையும் தாயார்
சொரூபராணியும் சாந்தி நிகேதனில் படித்து
வந்த மகள் இந்திரா ப்ரியதர்ஷினியையும்
பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு
சென்றார்.
அக்டோபர் மாதம் கமலாவின் உடல்நிலை
மோசமானது. மலைப்பிரதேசத்தில் வைத்து கமலாவுக்கு சிகிச்சையளிக்க
வேண்டும் என்று ஆலோசனை கூறினார்
டாக்டர். அதனால் போலீசாரின் அனுமதியுடன்
இமயமலை அடிவாரத்தில் உள்ள 'போவாலிக்கு அழைத்துச்
சென்றார் நேரு. ஆனாலும் போவாலுக்கு
அருகேயுள்ள அல்மோரா சிறைக்கு நேருவை
மாற்றினார்கள். அங்கும் கமலாவின் உடல்நிலையில்
முன்னேற்றம் ஏதும் இல்லாததினால் ஐரோப்பாவுக்கு
அழைத்து செல்லப்பட்டார்.
1935
ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம்
நாளன்று தற்காலிக விடுதலை அளித்தது அரசு.
கமலாவின் மரணம்:
கமலா தங்கியிருந்த பகுதியில்
பணிப்ப்பொழிவு அதிகமாக இருந்ததினால் அவரை
வேறு வெப்பமான பகுதிக்கு அனலித்துச் சென்றார். அங்கு சிகிச்ச்சையின் மூலம்
உடல் நிலை தேற ஆரம்பித்தது.
இருப்பினும்1936 ஆம் ஆண்டு பிப்ரவரி
28 ஆம் நாளன்று கணவரும் மகளும்
அருகிலிருந்த நிலையில் கமலாவின் உயிர் பிரிந்தது.
அவரது இறுதி சடங்குகளை
அருகிலேயே முடித்து விட்டு சாம்பலுடன் அலகாபாத்
வந்தடைந்தார் நேரு. ஒரு பகுதி
சாம்பலை தான் இறந்த பிறகு
தன் உடலை எரித்த சாம்பலுடன்
கலக்கும்படி கூறினார்.
மீண்டும் தேச சேவையில்:
நேருவை வரவேற்க விமான
நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகமே உறவாக
கூடியிருந்தனர்.
தலைவர்கள் அவரைக் கட்டித்தழுவி முதுகில்
தட்டிக்கொடுத்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.
அலகாபாத் சென்ற நேரு 'திரிவேனை'
சங்கமத்தில் கமலா நேருவின் அஸ்தியின்
ஒரு பகுதியினைக் கரைத்தார்.
அதன்பின்னர் 'பவனத்தில்' சில நாட்கள் தங்கி
ஓய்வெடுத்தார்.
அனால் தந்தையின் நினைவும்
மனைவியின் நினைவும் அவரை வாட்டத் தொடங்கவே
மாறுதல் வேண்டி மீண்டும் தேசிய
சேவையில் ஈடுபட்டார்.
இறகு ஒடிந்தது:
ஜவாஹர்லால் நேரு தன மனைவி
கமலா நேருவின் மீது உயிரையே வைத்திருந்தார்.
ஸ்விட்சர்லாந்துவரை போய் எத்தனையோ பெரிய
பெரிய வைத்தியமெல்லாம் கமலாவுக்கு செய்து பார்த்தார் நேரு.
ஒரு பக்கம் தேசத்தைப் பற்றிய
கவலை. எந்த நிமிஷம் தேசமாதா
சிறைக்கும் போராட்டத்துக்கும் அழைப்பாளோ என்று தயாராக இருக்க
வேண்டிய நிலைமை.
இம்மாதிரியான சமயத்தில்தான் இந்தியாவின் மாணிக்கத்திற்கு ஒரு இராகு ஒடிந்தது.
அவருக்கு மிகப் பெரிய துக்கம்
ஏற்பட்டது. அவருடைய மனைவி, கணவனையும்,
அருமை மகளையும் விட்டு மறைந்தார்.
அஞ்சாத மனா
உறுதி:
பண்டித நேரு அவர்களின்
துணைவி கமலா நேரு உடல்
நலமின்றி ஸ்விட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அந்த
கால கட்டத்தில் இந்திய அரசியலில் முக்கியப்
புள்ளியாக இருந்து வந்ததால் மருத்துவமனையில்
முழுமையாக இருந்து அவரால் கவனிக்க
முடியவில்லை. இந்தியாவுக்கும், ஸ்விட்சர்லாந்துக்குமாக அலைந்து கொண்டிருந்தார். அச்சமையம்
உலகப் போர் ஆரம்பமாகி இருந்துது.
ஒரு சமயம் இந்தியாவிற்கு
வரும் வழியில் ரோமில் நேரு
இறங்க வேண்டியதாயிற்று,இதைக் கேள்வியுற்ற சர்வாதிகாரி
முசோலினி ரோமில் நேரு தங்க
சிறப்பான ஏற்பாடுகள் செய்ததுடன், தான் நேருவை சந்திக்க
விருப்பம் தெரிவித்து தன் மருமகன் சியோனோவை
நேருவிடம் அனுப்பி வைத்தார்.
அனால் நேருவோ, "மக்களின்
எதிரி, கொடுமையான சர்வாதிகாரியான முசோலினியை தான் ஒரு போதும்
சந்திக்க மாட்டேன்", என்று கண்டிப்புடன் கூறி
சந்திக்க மறுத்து விட்டார்.
இதுபற்றி எட்வர்ட் தாம்சன் என்ற அறிஞர்
தனது நூலில் "ஒரு அடிமை நாட்டின்
எந்த அரசியல்வாதியும் முசோலினியை சந்திக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கமாட்டார்". நேரு ஒருவரால்தான்
துணிச்சலாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள முடிந்தது
என்று பாராட்டியுள்ளார்.
சுதந்திர தாகம்:
நேரு சிறுவனை இருந்தபோது
அவர் தந்தையாரிடம் பலர் வந்து அநீதிகளைப்
பற்றி உள்ளம் நொந்து விளக்குவார்கள்.
அதனைக் கேட்கக் கேட்க நேருவின்
உள்ளத்தில் ஆங்கிலேயர்களின் கொடுஞ் செயல்கள் ஓவ்வொன்றாக
ஆழப்பதிந்தன. அவை தான் அவரை
விடுதலைப்போரில் ஊக்கத்தோடும், திறமையோடும் பங்கு பெறச் செய்தன.
போரிடும் உறுதியை அவருக்கு அளித்தன.
நெடுந்தூர பிரச்சார
பயணம்:
காங்கிரஸ் மகாசபை பெரோஸ்போரில் கூடி
மீண்டும் மூன்றாவது முறையாக நேருவைத் தலைவராகத்
தேர்ந்தெடுத்தது.
1935 ஆம் ஆண்டு நாடு
முழுவதும் தேர்தல் நடத்தப் பதவிகளை
வகிப்பதா? என்ற விவாதத்தில் நேருவுக்கு
விருப்பமில்லாதிருந்தது.
இருப்பினும் சபையினரின் விருப்பத்திற் கிணங்கத் தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானித்தனர்.
தமக்கு விருப்பமில்லை என்றாலும்
பிரச்சாரம் செய்ய முன்வந்த நேரு
நன்கு மாதங்களில் சுமார் எண்பதாயிரம் கி.மீட்டர் தூரம் பயணத்தை
மேற்கொண்டு காங்கிரஸ் வெற்றியடையப் பாடுபட்டார்.
சுபிட்சமடைந்தனர்:
காங்கிரஸ் மந்திரிசபை ஏற்றத்தின் பயனாக விவசாயிகளின் கடன்
பளுவுக்கு நிவாரணம் கிடைத்தது. பிள்ளைகளுக்குக் கட்டாயப் படிப்புக் கிடைத்தது. கூட்டுறவு முறையில் மக்கள் சுபிட்சமடைந்தனர்.
நேரு அநாதையானர். அவருக்கென்று
ஒரே ஆதரவாக இருந்தவர் மகள்
இந்திரா மட்டும்தான்.
முதல் பெண்மணி:
தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. ஆறு
மாகாணங்களில் பதிவு ஏற்றனர்.
அதில் நேருவின் தங்கை
விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு ஐக்கிய மாகாணத்தில் மந்திரி
பதவி கிடைத்தது. மந்திரி பதவி வகித்த
முதல் பெண் இவர்தான் என்று
கூறவேண்டும்.
அயல்நாடு பயணம்:
சொந்த பந்தத்தினர் உற்றார்
உறவினர்கள் தன்னை விட்டுப்போய் விட்டதினால்
தனிமையில் துவண்ட நேரு காங்கிரஸின்
தலைமைப் பதிவியினை சுபாஷ் சந்திர போஸிடம்
அளித்துவிட்டு மகளைக்கான ஐரோப்பியா நாட்டிற்கு சென்றார்.
அங்கிருந்து 'செக்' நாட்டிற்குச் சென்றபோது
ஜேர்மன் ஞானிகள் தங்களது நாட்டிற்கு
வந்து செல்லுமாறு அழைத்தனர்.
ஆக்கிரமிப்புக் கொள்கையுடைய அவர்களின் அழைப்பினை நேரு ஏற்கவில்லை.
அதன் பின்னர் ஸ்பெயின்
நாட்டிற்குச் சென்றார்.
அங்கு உள்நாட்டுக் கழகம்
நடந்து கொண்டிருந்ததினால் மக்கள் உணவு போன்றவற்றிக்கு
மாகவும் சிரமப்பட்டு வந்தனர். அதனை அறிந்த நேரு
நம் நாட்டிலுள்ள முக்கிய தலைவர்களுடன் தொடர்பு
கொண்டு கப்பல் நிறைய உணவுப்
பொருட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொண்டார்.
அவரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய
நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு உணவுப் பொருட்கள் காப்பக
மூலம் சென்றது.
சீனாவிலிருந்து திரும்பினார்:
1939 ஆம் ஆண்டு சீனாவுக்குச்
சென்ற நேரு அச்சமயத்தில் சீனாவுக்கும்
ஜப்பானுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது.
சீனர்கள் தம் நட்டுச் சுதந்திரத்திற்கென
ஒற்றுமையாகப் போரடிக் கொண்டிருந்தனர்.
சீனத் தலைவர் சியாங்கே
ஷேக்கைக் கண்டு அவருடைய நாட்டைப்
பெற்ற நேரு.
இருப்பினும் இரண்டாம் உலகப்போர் மூளலாம் என்ற நிலையில்
நேரு இந்தியாவுக்குத் திரும்பினார்.
1939 ஆம் ஆண்டு செப்டம்பர்
2 ஆம் நாளன்று இரண்டாம் உலகப்போர்
தொடங்கியது.
உலகப்போரில் பிரிட்டிஷ் அரசு தோல்வியைத் தழுவியது.
அதனால் அரசில் பல குழப்பங்கள்
நிலவின.
சுபாஷுச்சந்திரபோஸின்
இராஜினாமா:
1938 ஆம் ஆண்டு நேரு
இந்தியாவுக்கு வந்தார். அப்பொழுது சுபாஷ்-பட்டேல் என்ற
இரு கோஷ்டிகளாக பிளவுபட்டிருந்தது. சமாதானப்படுத்த நேரு முயன்றார்.
இதற்கிடையில்
இருவரிடையே தலைமைப் பதிவிக்குத் தேர்தல்
போட்டி நடந்தது. அந்த போட்டியில் சுபாஷ்
பெற்றி பெற்றார். இருப்பினும் சில மாதங்களில் தலைமைப்
பதைவியினை இராஜினாமா செய்து விட்டு நட்டு
விடுதலைக்காகக் போராடுவது தம் வழி தனி
வழியை என்று சென்றுவிட்டார்.
சத்யாகிரகப் போராட்டம்:
இந்தியத் தலைவர்கள் பூரண சுதந்திரம் தருவதாக
இருந்தால் மட்டுமே பிரிட்டிஷ் அரசுக்கு
ஆதரவாய்ப் போரில் இறங்குவதென உறுதி
பூண்டிருந்தனர்.
ஆனால் ஆங்கிலேய அரசுக்கு
சுதந்திரம் அளிப்பதில் விருப்பமில்லை. அதனால் பிரிட்டிஷ் அரசு
நம் நாட்டுத் தலைவர்களைக் கலக்காமலேயே இந்தியாவை உலகப் போரில் ஈடுபட
வைத்தனர்.
அதைக் கண்டா தலைவர்கள்
ஆறு மாகாண மந்திரி சபைகளையும்
கலைத்து விட்டு வெளியேறினார்.
உலகப் போரில் இந்திய
வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது
என்பதற்காக காந்திஜி சத்யாகிரகப் பூரித்த தொடங்கினார்.
கைதும் விடுதலையும்:
1940 ஆம் ஆண்டில் நேரு
வார்தாவுக்குச் சென்று அங்கிருந்த காந்திஜியை
சந்தித்து அரசியலில் விஷயமாகப் பேசிவிட்டு இரயிலில் திரும்பிக்
கொண்டிருந்தார்.
இடையில் 'சியோகி' என்ற ஸ்டேஷனில்
இரயில் நின்றது.உடனே இந்தியத்
தற்காப்புச் சட்டப்படி நேருவை கைது செய்து
நான்கு வருடச் சிறைத் தண்டனை
வழங்கிட உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நாட்டு
மக்கள் அதனை எதிர்த்து ஊர்வலங்களை
நடத்தினர். அதனை அறிந்த ஆங்கிலேயே
அரசு நான்காண்டுகள் சிறைத் தண்டனை என்பதை
மாற்றி 1941 ஆம் ஆண்டில் சதியாக்
கிரகிகள் அனைவரையும் விடுதலைச் செய்தது. அதில் நேருவும் அடங்குவர்.
வெள்ளையனே வெளியேறு:
விடுதலைக்கு உதவாத கிரிப்ஸ் கொண்டு
வந்த திட்டங்களை நிறைவேற்றிய காந்திஜி 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
7,8 ஆம் நாட்களில் நடைபெற்ற மும்பை காங்கிரஸ் காரியாக்
கமிட்டிக் கூட்டத்தில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
எந்த விஷத்தை அறிந்த
பிரிட்டிஷ் அரசு, முக்கியத் தலைவர்களை
எல்லாம் மிகவும் ரகசியமாக இரயிலேற்றி
ஆங்காங்கே சிறையில் அடைத்தனர்.
மக்களின் ஆவேசச்
செயல்கள்:
தலைவர்கள் சிறியிலடைக்கப்பட்ட செய்தியினை அறிந்த மக்கள் கொதித்து
எழுந்தனர். இரயில்களைத் தடுத்து நிறுத்தினர்.போலீஸ்
நிலையங்களுக்கு தீயிட்டனர்.
இந்த செயல்களைக் கேள்விப்பட்ட
காந்திஜி, வருத்தப்பட்டதோடு, மக்களின் ஆவேசம் தவறு என்று
21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
1943 ஆம் ஆண்டு மக்கள்
வறுமையினால் வாடினார். பசி, பட்டினியால் பலர்
உயிரிழந்தனர். இதற்கெல்லாம் காரணம் பிரிட்டிஷ் அரசு
தான் என்று நேரு மிகவும்
ஆத்திரமடைந்தார். போர்தான் பஞ்சத்திற்கு அடைப்படை என்று எடுத்துக் கூறினார்.
நேருவின் வாதத்திறமை:
உலகப் போரில் ஜப்பான்
சரணடைந்தது. அந்த சமயத்தில் ஐ.ஏன்.ஏ படை
வைத்து நடத்தி வந்த நேதாஜியும்
விமான விபத்தில் பலியானார்.
இந்திய
இராணுவ வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களுக்கு ஆதரவாக நேரு வக்கீலாக
வாதாடினார்.
'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தினாலும் நேருவின்
வாதத்தினாலும் பிரிட்டிஷ் அரசு வீரர்களை மன்னித்து
விடுதலை செய்தது.
இடைக்கால அரசு:
ஆம்
ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாளன்று இடைக்கால
அரசினை பிரிட்டிஷ் அரசு நிறுவி, இடைக்கால
அரசின் துணைப் பிரதமராக நேருவும்,
தலைவராக ஆடலி பிரபுவும் செப்டம்பர்
2 ஆம் நாளன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்காக
நேரு உரையாற்றவும் செய்தார்.
ஜின்னாவின் போராட்டம்:
1946 ஆம் ஆண்டு காங்கிரஸ்
கட்சி தேர்தலில் நேரு தலைவராக தேர்ந்துடுக்கப்பட்டார்.
'தனிநாடு
வேண்டுமென போராட்டத்தில் இறங்கினர்.
வைஸ்ராய், நேர்வை இடைக்கால அரசு
அமைக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
காங்கிரசுக்கு ஆறு இடங்களையும், முஸ்லிம்களுக்கு
ஐந்து இடங்களையும் ஒதுக்கினார்.
அப்படியும் ஜின்னா திருப்தியடைவில்லை. அமைதியாக
இருந்த கொல்கத்தாவின் மதக் கலவரம் ஏற்பட
அவரே காரணமாகி விட்டார்.
முஸ்லீம்களையும், இந்துக்களையும், இடைக்கால அரசையும் எதிர்த்த முழக்கமிட்டனர். அத்தோடு மும்பை, பீஹார்
போன்ற நகரங்களிலும் கலவரம் தீவிரமடைந்தது.
இத்தனை கலவரங்கள் நடந்த
போதிலும் நேரு பொறுமையுடனே இருந்தார்.
அதிருப்தியடைந்த முஸ்லிம்களிடையே, இந்தியர்களிடையே ஒற்றுமை இருந்தால்தானே நாம்
அந்நியர் நாட்டைவிட்டு விரட்ட முடியும் என்று
சமாதானமாகவே கூறிவிட்டுச் சென்றார்.
இந்திய சுதந்திரமடைந்தது:
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
திங்கள் 15 ஆம் நாளன்று புது
டில்லியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
சுதந்திர விழாவில் கலந்து கொள்வதற்காக மக்கள்
வெள்ளம் செங்கோட்டையை நோக்கி வந்தது.
தேச விடுதலைக்காக போராடி
உயிர்நீத்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
வெண்ணிற உடைகளில் நேரு
நள்ளிரவு நேரத்தில் உரை நிகழ்த்தினார். அதன்பின்பு
இந்திய தேசிய மூவர்ணக் கோடியை
ஏற்றி வைத்தார்.
நிமிடத்திலிருந்து
இந்தியா சிதந்திர நாடானது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவாஹர்லால்
நேரு பதவி ஏற்றார்.மௌண்ட்பாட்டன்
பிரபு கவர்னர் ஜெனெரலாக பதவியேற்றார்.
மதப்பேய்க்கு இரையானார் நமது தேசப்பிதா:
1948
ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம்
நாளன்று வழிபாட்டிற்காக தனது பேத்திகளில் தோள்களில்
இரு கைகளையும் போட்டுக் கொண்டு வழிபாட்டிற்கு சென்ற
காந்திஜியை கோட்சே என்ற மதவெறியன்
துப்பாக்கியால் சுட்டான். ராமநாமத்தை முணுமுந்தபடியே தன்னுயிரை நீத்தார் அந்த மகாத்மா.
நேரு காந்திஜியின் பாதையிலேயே
நாட்டை வழி நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் காந்தி மகானுக்கு அஞ்சலி
செலுத்தினர்.
நேரு அல்லும் பகலும்
நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு
உழைத்தார்.
ஜெய்ப்பூர் மாநாடு:
ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்
நேரு இரண்டு டெர்மங்களை நிறைவேற்றினர்.
- இந்தியாவை ஒரு குடியரசு நாடாக்குவது.
- இந்தியாவின் சுதந்திரத்தில் தலையிடாமல் அதன் முன்னேற்றத்தில் அக்கறை
கொள்ளும் எந்த நாட்டுடனும் நட்பு
கொள்ளத்தயார். என்ற தீர்மானங்களை கூறி நம்மோடு
எப்போதும் சமாதானத்தை விரும்பும் நாடக இருக்கும் என்றும்
கூறினார்.
நேருவின் நேர்மை:
பாரதத்தின் முதல்
பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு குழந்தைகள் என்றாலே கொள்ளைப் பிரியம்.
அதிலும் அவர் தனது செல்லப்
பேரன் மீது அளவற்ற பாசம்
வைத்திருந்தார்.
நேரு அடிக்கடி வெளிநாடு
சென்று வருவார். அப்படி ஒரு முறை
வெளிநாடு செல்லும்போது அவரது செல்லப் பேரன்
தனக்கு ஒரு பொம்மை வாங்கி
வரும்படி அவரைக் கேட்டுக் கொண்டான்.திரும்புகையில், ஒரு கரடி பொம்மையை
வாங்கி வந்தார். விமான நிலையத்தில் தனது
பேரனிடம் பொம்மையை கொடுத்துவிட்டு, அருகிலிருந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து,
"பொம்மைக்குச் சுங்கவரி கட்டி விட்டிர்களா?" என்று
கேட்டார்.
அதற்கு அதிகாரி, "ஐயா,
நீங்களோ நாட்டின் பிரதமர், பிரதமர் எதற்கு சுங்கவரி
கட்ட வேண்டும்?" என்று வியப்புடன் கேட்டார்.
அதற்கு நேரு, "என்
நேர்மைக்குக் கேடு வந்து விடும்!
மக்களுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? முதலில்
சுங்கவரியைக் கட்டி விட்டு, பிறகு
என் முகத்தில் முழியுங்கள்" என்று கோபத்துடன் கூறினாராம்.
நேருவின் ரஷ்யப்
பயணம்:
மொஸ்கோவ்விற்கு வருகைபுரிந்தபடி நேருவுக்கு அழைப்பு வந்தது. அழைப்பை
ஏற்று தன மகள் இந்திராவுடன்
பயணமானார்.
நேருவின் ஐந்தாண்டு
திட்டங்கள்:
முதல் ஐந்தாண்டு
திட்டம்:
1952 முதல் 1955 ஆம் ஆண்டு வரையிலான
செயல்கள் முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முறைப் படுத்தப்பட்டது.
இரண்டாவது ஐந்தாண்டு
திட்டம்:
இத்திட்டத்தின்கீழ், 1956-1957 ஆம் ஆண்டில் நேரு
பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார்.
நீர்ப்பாசனம்,தொழிலாளர்களிடம் மதிப்பு, கைதிகளிடத்தில் அன்பு,எளிமை, உறுதி
அனைத்தும் இடம் பெற்றன.
அனைத்துப் பணிகளிலும்
நிறைவு:
1964 ஆம் ஆண்டு மே
மாதம் 26 ஆம் நாளன்று தமது
பணிகளை நடுநிசி வரை செய்து
கொண்டிருந்தார்.
கையெழுத்து இடவேண்டியப் பணிகளை செய்து முடித்தார்.
மகள் இந்திராவிடம் 'அனைத்துப்
பணிகளையும் நிறைவு செய்து விட்டேன்
பிரியதர்ஷினி, மனநிறைவுடன் படுகைக்குச் செல்கிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார்.
மறுநாள் அவரது உடல்
நிலை கவலைக் கிடமானது.தீவிரமான
இருதய நோயால் தாக்கப்பட்டார். தீவிர
சிகுச்சையில் இருந்து வந்தார்.
இறப்பதற்கு முன்னர் தனது காலடியை
பூமியில் பதித்தார்.
இனி என்னை எந்த
மருந்தும் காக்க முடியாது. என்
நேரம் நெருங்கிவிட்டது என்று கூறினார்.
உடனே மயங்கினார். புகழ்,
பெருமை எதைப் பற்றியும் சிந்திக்காமல்
சுகமாக மரணத்தை தழுவினார். பிற்பகல்
2 மணி அளவில் அவரது உயிர்
அவரை விட்டு பிரிந்தது.
அவரது விருப்பப்படியே உடற்
சாம்பல் இந்தியா பூராவும் தூவப்பட்டது.
ஆசிய ஜோதி,சமாதானப்புறா,
மனிதர்குல மாணிக்கம், ரோஜாவின் ராஜா, குழந்தைகளின் மாமா
என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்டவர்தான் பண்டித ஜவாஹர்லால் நேரு.
அவரது புகழ் ஓங்குக. வளர்க
உலக சமாதானம்!.
நேரு ஒரு
அன்பான
பண்பாளர்:
புதுடில்லியில் ஓர் இசை நிகழ்ச்சி
ஏற்பாடாகியிருந்தது. இசைத் துறையில் புகழ்
பெற்ற ஓம்கார் நாத் தாகூர்
என்பவற்றின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வில் அப்போதையப் பிரதமர் நேருவும், பிற
அமைச்சர்களும் எனப் பிரபலங்கள் பலர்
கலந்து கொண்டனர். நேரு முன் வரிசையில்
உட்காந்து இசையை ரசித்து கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்திலிருந்தவரிடம் நேரு எதோ
பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த இசையறிஞர்
தனது இசை நிகழ்வை நிறுத்திக்
கொண்டார். நிறுத்தியவர் பார்வையாளர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார்.
" நம்முடைய நேரு அவர்கள் மிக
இன்றியமையாத செய்தியினை பக்கத்தில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடைய
இசையால் அவருடியப் பேச்சுக்குத் தடை ஏற்பட்டு விடக்கூடாது.
எனவே அவர் பேசி முடித்ததும்
மான் தொடங்குவேன்."
இதைக் கேட்ட நேரு
இசை நிகழ்வில் தன செயல் தவறானது
என்பதை உணர்ந்தார். இசையறிஞர் கிண்டல் செய்கிறார் என்பதையும்
புரிந்து கொண்டார். இசையறிஞர் மீது வருத்தப்படவும் இல்லை.
தனது பேச்சை நிறுத்திக் கொண்டு
இசை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினர்.
நேரு ஒரு
புத்தக
பிரியர்:
ஒரு சமயம், நேரு
வெளியூர் பயணம் கிளம்பினார். போய்
வர கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும்.
இதற்காக 50 புத்தங்ககளை நேரு எடுத்து வைத்தார்.
இதை கவனித்த அவரது மகள்
இந்திரா காந்தி, "அப்பா, இவ்வளவு புத்தகங்களையும்
உங்களால் எப்படி இந்தப் பயணத்தில்
படிக்கச் முடியும்? என்று கேட்டார்.
அதற்கு நேரு, " உண்மைதான்,
இவ்வளவு புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாதுதான்.
ஆனால் நூல் எழுதிய அறிஞர்கள்
எல்லோரும் என் கூட இருப்பதுபோல
நான் உணர்வேன் அல்லவா? இந்தத் துணை
அபார சக்தி கொண்டது. அதனாலதான்
இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறினார். அந்த
அளவுக்குப் புத்தகப் பிரியர் நேருஜி.
நேருவின் பலவீனம்:
நேரு மிகவும் உடல்நிலை
பாதிக்கப்பட்டிருந்த நேரம். அவரை விட்டு
வெளியே செல்ல வேண்டாமென்று டாட்டர்கள்
சொல்லியிருந்தார்கள். பிரபல இந்தி எழுத்தாளர்
கே. ஏ. அப்பாஸ் நேருவை
சந்திக்க வந்திருந்தார். இரண்டே இரண்டு நிமிடம்
பார்த்து விட்டுப் போய்விடுகிறேன் என்று ஒரு சீட்டு
எழுதி அனுப்பினார்.
"அவரை உள்ளெ அனுப்பு"
என்று நேரு உத்தரவிட்டார்.
அவருடைய படுக்கையறைக்கு அப்பாஸ்
சென்றார். அது விசாலமானது. கதவைத்
திறந்ததும் வராந்தாவில் முறுகோடியில் ஒரு
சாய்வு நாற்காலியில் நேரு உட்கார்ந்திருந்த்தைக் கண்டார். அவர்
எதிரில் ஒரு தேனீர் கோப்பைத்
தட்டு இருந்தது.
நுழைந்த மறு நிமிடமே நேரு எழுந்து
தள்ளாடும் நடையுடன் அப்பாஸை நோக்கி வந்தார்.
அப்பாஸ் ஓடிச் சென்று தடுத்து
அவரை உட்காரும்படி சொன்னார்.
"நீங்கள் இப்படி அவசரமாக
உதவியில்லாமல் எழுந்திரிக்கக் கூடாது என்று டாக்டர்கள்
தடுத்திருக்கிறார்கள்"
என்று அன்புடன் கடிந்து கொண்டார்.
அவர் திரும்ப அமர்ந்தார்.
"டாக்டர்களாம் டாக்டர்கள். டாக்டர் சொன்னாரென்று நம்முடைய
பண்பாட்டையும், மரியாதையும் விட்டுவிடச் சொல்கிறீர்களா என்ன?" என்றார் நேரு.
"பண்பாடு, மரியாதை, ஆம் இதுதான் அந்த
மாபெரும் பலம் மிக்க மனிதரிடம்
இருந்த ஒரே பலவீனம்" என்றார்
அப்பாஸ்.
நேருவின் ரோஜா
ரகசியம்:
நேருஜி எப்போதும் தன்
சட்டையிலுள்ள பட்டன் துவாரத்தில் ஒரு
ரோஜாப்பூ வைத்திருப்பார். அவருக்கு இந்த பழக்கம் ஏற்பட்டது
எப்படி தெரியுமா? ஒருமுறை சுதந்திர கட்சியின்
எம்.பி.யான 'நரசிங்
மேத்தா' என்பவர் நேருவைச் சந்திக்க
அவரது இல்லமான ஆனந்தபவனுக்குச் சென்றிருந்தார்.
அப்போது மேத்தா தன்
சட்டையில் ஒரு ரோஜாப்பூவை செருகி
வைத்திருந்தார். அதைக் கண்ட நேரு
மிகவும் ரசித்து அவரைப் பாராட்டினார்.
அருகிலிருந்த பூந்தொட்டியிலிருந்து தானும் ஒரு ரோஜாபூவைப்
பறித்து தன் சட்டையில் செருகிக்
கொண்டார். அன்றிலிருந்து 'ரோஜாவின் ராஜா' ஆகிவிட்டார்.
தர்க்கரீதியான சிந்தனை:
அரசியல் கூட்டம் ஒன்று
பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது.
அதில் ஒரு தத்துவப் பேராசிரியர்
உரையாற்றினார். அவர் காங்கிரஸ் மகாசபையின்
நடவடிக்கைகளைத் தர்க்க ரீதியாக நடைமுறைக்கு
ஒத்து வராதவை என்றார். அதனால்
என்ன பயன்? இந்த வழியில்
போகாவிட்டால் என்ன இழப்பு வந்து
விடும்? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். அத்துடன் காங்கிரஸ் காரர்கள் பகல் கனவு காண்கிறார்கள்
என்றும் குற்றம் சாட்டினார். மேலும்
நுண்ணறிவு படைத்த அரசியல் வாதிகள்
கற்பனை உலகில் சிறகடித்துக் கொண்டிருக்காமல்
உண்மைஉலகுக்கு இறங்கி வர வேண்டும்.
பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டும்
எனக் கூறி அமர்ந்தார்.
கூட்டத்தலைவர் நேரு புன்னகை புரிந்தபடியே
எழுந்து முடிவுரையில் "நமது பேராசிரியர் நண்பரின்
சொற்பொழிவைக் கேட்டபோது ஒரு க்ரேக்கப் பேராசியரின்
நினைவு வந்தது. அவருக்கு தர்க்க
ரீதியாகப் பேசும் வல்லவர்களாக சீடர்கள்
உண்டு. ஒரு சமயம் அந்தப்
பெரியாசிரியர் சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே வர
முடியாமல் தவித்தார். அப்போது அன்பிற்குரிய ஓவர்
சீடன் அங்கு வந்தான். அவன்
இவரைச் சேற்றிலிருந்து விடுவிப்பதால் என்ன பயன்? இல்லாவிட்டால்
என்ன குடி முழுகிப் போய்விடும்?
என்று சிந்திக்க ஆரம்பித்தான். முளை குழம்பியதே தவிர
முடிவுக்கு வரமுடியவில்லை.
நீண்ட நேரம் சிந்தித்த
பிறகு நுண்ணறிவு படைத்த நான் ஆற
அமர மேலும் தர்க்கரீதியாகச் சிந்தித்த
பின்பே ஒரு முடிவுக்கு வருவேன்
என்று சொல்லிவிட்டு போய்விட்டான்" என்று நேரு கூறியதைக்
கேட்டதும் கோட்டத்தில் சிரிப்பும், ஆரவாரமும் ஏற்பட்டது.
தர்க்கப் பேராசிரியர் தலை கவிழ்ந்தது.
மக்களின் மகிழ்ச்சி:
1959 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப்
பிரதமர் இராபர்ட் மென்சிஸ் புது டில்லிக்கு வருகை
தந்தார். அப்போது நேரு ஓய்வாகச்
சொந்த முறையில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது இராபர்ட் நேருவிடம்,
"இந்த உலகத்திலேயே அதிகப் புகைப்படம் எடுக்கப்பட்டவர்
அநேகமாக தாங்கள் ஒருவர்தான். உங்கள்
புகைப்படம் வெளிவராத பத்திரிகையோ, செய்தித்தாளோ கிடியாது. உங்கள் புகைப்படத்தைப் பார்த்துத்
தற்பெருமை கொள்வீர்களா?" என்று கேட்டார்.
அதைக் கேட்டுப் புன்முறுவல்
பூத்த நேரு, "உஹும், என் படத்தை
பார்த்து மகிழ்ச்சியடைவேன். ஆனால் தற்பெருமை கொள்ள
மாட்டேன். எங்கள் நாட்டில் பெரும்பாலான
மக்கள் கல்வி அறிவு பெறாதவர்கள். வளர்ந்து வரும் எங்கள் நாட்டைக்
குறித்தும், நான் மக்களுக்காகச் செய்யும்
தொண்டுகள் குறித்தும் அவர்கள் உங்கள் நாட்டு
மக்கள்போல் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. அதனாலதான்
நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் நான்கு பங்கு கொள்ளும்போதெல்லாம்
பல புகைப்படங்களும் நான் போஸ் கொடுக்க
வேண்டியதாகிறது. என் புகைப்படங்களைப் பார்த்து
நான் மக்களுக்காக ஆற்றும் தொண்டுகளில் அவர்கள்
நம்பிக்கை கொள்கிறார்கள். என் நாட்டு மக்களின்
மகிழ்ச்சிதான் எனது இலட்சியம்" என்றார்.
சமதர்மம் கண்ட
முதலாளி:
கல்கத்தா சென்று இரவு 12 மணிக்கு
டெல்லிக்கு திரும்புவதாக இருந்த பண்டித நேருவை,
அவரது இல்லத்தில் சந்திக்கக் காத்திருந்தார்
வள்ளல் அழகப்ப செட்டியார். அழகப்பரை
இரவு 12 மணிக்கு மேல் தமது
இல்லத்தில் கண்டதும் வியப்படைந்தார் நேருஜி.
"என்ன விஷயம்?" என்று
நேருஜி கேட்ட போது அழகப்பச்
செட்டியார் ஒரு வேண்டுகோளை இந்தியப்
பிரதமரிடம் எடுத்து வைத்தார்.
"தங்கள் அரசாங்கம் மின்சார
வேதியியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்க
முடிவு செய்துள்ளதாக எனக்குத் தெரிய வந்தது. இந்த
ஆராய்ச்சி நிலையத்தைப் பிந்தங்கிய பகுதியான எங்கள் காரைக்குடி பகுதியில்
நிறுவினால் அதற்கென 300 ஏக்கர் நிலத்தையும், 15 லட்சரூபையையும்
நன்கொடையாக தர விரும்புகிறேன்" என்றார் அழகப்பர்.
"நன்கொடை தருவதற்காக நள்ளிரவில்
காத்திருந்து விருப்பம் தெரிவிக்கிறீர்களே, உங்களை எப்படி பாராட்டுவது
என்றே புரியவில்லை" என நேரு சொன்னபோது.
"நான் புரியுமாறு சொல்கிறேன்,
காரைக்குடியில் மத்திய மின்சார வேதியியல்
ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி விடுங்கள். அது
என்னைப் பாராட்டியதாக அமைந்து விடும்" என்றார்
அழகப்பர்.
அப்போது நேருஜி அங்கே
வந்த தனது தங்கை விஜயலக்ஷ்மி
பண்டிட்டிடம், "இவரை உனக்குத் தெரியுமா?"
எனக் கேட்டார்.
"தெரியவில்லையே" என்றார் விஜயலக்ஷ்மி பண்டிட்
"இவர் ஒரு சமதர்ம
முதலாளி; தென்னாட்டில் கரைக்குடியைச் சேர்ந்தவர்" என நேருஜி தமது
சகோதரிக்கு அழகப்பரை அறிமுகப்படுத்தினார்.
அந்தச் சமதர்ம முதலாளியின்
நினைவை, கரைக்குடியிலுள்ள "மத்திய எலெக்ட்ரோ கெமிக்கல்
ரிசெர்ச் இன்ஸ்டிடியூட்" என்றெல்லாம் மக்கள் நெஞ்சில் தங்கச்செய்யும்.
உயிர்களைக் காப்பாற்றிய
பெருமை:
இந்தியாவின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தபோது ரஷ்யாவின்
அதிபரான குருசேவ் இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் நேரு
பஞ்சசீலக் கொள்கைகள் வகுத்து உலக சமாதானத்தைப்
பற்றி வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு சமயம் நேருவும்,
குருசேவும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். தனது
ரஷ்ய நாட்டைப் பற்றி எப்போதுமே பெருமையாகப்
பேசுபவர் குருசேவ்.
"உலகிலேயே வல்லமை மிக்க படை
எங்களுடைய படைதான். அது சோவியத் யூனியனின்
மாபெரும் சக்தி. அந்த சக்தியின்
மூலம் உலக நாடுகள் முழுவதையும்
அடிபணியாச் செய்வோம். அந்தக் காலம் வெகு
தொலைவில் இல்லை. இப்போது கூட
பாருங்கள். கியூபாவை வளைத்துப் பிடிக்க சோவியத் யூனியனின்
மிகப் பெரிய கடற்படை சென்று
கொண்டிருக்கிறது" என்று பெருமையுடன் கூறினார்.
அவரது பேச்சிலிருந்து அவரது
நாடு பிடிக்கும் அகந்தையை தெரிந்து கொன்டே நேரு, அவருக்கு
பாடம் எண்ணினார்.
"பாருங்கள் நண்பரே! எங்கள் இந்தியாவில்
அசோகர் என்ற பெயர் கொண்ட
மாபெரும் சக்ரவர்த்தி ஒருவர் இருந்தார். அவர்
மிகப் பெரிய வீரர். மாபெரும்
படை பலத்தைக் கொண்டவர். அவர் இந்தியா முழுவதையும்
தன ஆட்சியின் கீழ் கொண்டு வர
வேண்டும் என்ற பேராசையில் பல
பெரும் போர்களை நடத்தினர் எல்லாப்
போர்களிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது.
ஒருநாள் அசோகரின் மகள்
சங்கமித்ரை அவரைச் சந்தித்து "தந்தையை,
எத்தனையோ லட்சம் உயிர்களை அளித்து
மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறீர்கள். இதன் காரணமாக மகா
சக்கரவர்த்தி என்ற பெயரைப் பெற்றிருக்கிறீர்கள்.
இந்த மகாசக்திக் கொண்ட பெயரைப் பயன்படுத்தி,
போரில் இறந்து போன ஒருவருக்கு
உங்களால் உயிரைத் தர முடியுமா?
என்று கேட்டாள்" என்று கூறினார்.
குருசேவ் நிமிர்ந்தார்.
நேரு தனது பேச்சைத்
தொடர்ந்தார்.
"மகள் கேட்ட கேள்வி
அசோகரின் மனதைப் பெரிதும் பாதித்தது.
எத்தனையோ லட்சம் உயிர்களை அளித்து
மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தன்னால் போரில் கொல்லப்பட்ட
ஒருவருக்கு நிச்சியம் உரைத்த திருப்பித் தர
முடியாது என்பதை உணர்ந்தார். உடனே
அளிப்பதை விட ஆக்குவதே சிறந்தது
என்ற முடிவுக்கு வந்தார்.
"ஆக்கத்திற்கு எதற்கு வீரமும், படைபலமும்"
என்று நினைத்த அவர், தனது
நாடு, செல்வம், படை பலம் அனைத்தையும்
துறந்து துறவியாகி விட்டார்" என்று கூறி முடித்தார்
நேரு.
அந்த சம்பவத்தைக் கேட்டதும்
குருசெவிடம் பெரிய மாறுதல் ஏற்பட்டது.
சிறிது நேர யோசனைக்கு
பின் கியூபாவை நோக்கி சென்று கொண்டிருந்த
கடற்படையை உடனே சோவியத் யூனியனுக்கு
திரும்புமாறு கட்டளை பிறப்பித்தார்.
ஒரு சிறு சம்பவத்தைச்
சொல்லியதன் மூலம் ஒரு நாட்டையும்
பல லட்சம் உயிர்களையும் காப்பாற்றிய
பெருமை நேருவை வந்தடைந்தது.
தூங்காத நேரு:
இந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு
முடிவு காண காந்தியடிகள் ஒரு
முறை நவகாளி யாத்திரை மேற்கொண்டார்.
ஒரு முக்கியப் பிரச்சனையில் மகாத்மாவிடம் யோசனைக் கேட்கப் போனார்
பிரதமர் நேரு. மகாத்மாவை எழுப்பக்
கூடாது என்று திண்ணையில் அமர்ந்திருந்தார்.
வழக்கம்போல் அதிகாலையில் எழுந்த மகாத்மா நேருவைக்
கண்டு ஆசிரியதுடன்.
"இந்தியாவின் பிரதமர் இப்படி அதிகாலையில்
உறங்காமல் காத்திருக்கிறார்?" என்று கேட்டார்.
அப்போது நேரு, "பாரதம்
தூங்கிக்கொண்டிருக்கும்போது
நான் எப்படித் தூங்க முடியும்?" என்று
கேட்டாராம்.
நேருவுக்கு பிரச்சனையாக இருந்தது தேசிய மொழி. இந்தியை
தேசிய பொதுமொழியாக இருக்க வேண்டுமென்பதை பெரும்பான்மையான
வட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டபோதிலும், தெற்கே குறிப்பாக சென்னை
மாநிலம் இந்தியை முழுமூச்சுடன் எதிர்த்தது.
அதனால் நேரு பாராளுமன்றத்தில் ஓர்
உறுதிமொழி அளித்தார். 'இந்தி பேசாத மக்கள்
விரும்பும்வரை ஆங்கிலமும் அனுமதிப்பது'.
இடத்தில், இனத்தால், மதத்தால், மொழியால், பழக்க வழக்கை, வாழ்க்கை
முறைகளால் வேறுபட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமையைப் பலப்படுத்தும் தேசிய ஒருமைப்பாடே நேருவின்
லட்சியமாக இருந்தது. அதற்காக அவர் பல
பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால்
அன்றைய மாநிலக் கட்சிகள் தங்களது
கச்சையைப் பலப்படுத்தவும், தங்களது சொந்த சுய
லாபத்திற்காகவும் அதை ஏற்க மறுத்தன.
அதன் விளைவு இன்று வரை
மொழி பிரச்சனை ஒரு பெரும் குறையாகவே
இருந்து வருகின்றது. படித்த இளைஞர்கள் தங்களது
துறையில் திறமை இருந்தும் மொழி
தெரியவில்லை என்றால் தங்களது எதிர்காலம்
கெடும் சூழ்நிலைதான் இருக்கின்றது. இளம் வயதில் ஐந்தாம்
வகுப்புவரை படித்த பெருந்தலைவர் காமராஜர்,
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவே கல்வியைத் துறந்தார்.
இவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று எதிர்க் கட்சியினர்
கிண்டல் செய்வதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல.
நேரு போன்ற தலைவர்களுடன் உரையாடும்
அளவுக்கு காமராஜருக்கு ஆங்கிலம் புலமை உண்டு.
ஒருசமயம் நேரு சென்னை வந்து
திரும்பியபோது, காமராஜர் வழியனுப்ப விமான நிலையம்வரை சென்றார்.
தனி விமானம்.
நேரு விமானத்தில் ஏறி,
ஏணி எடுக்கப் போகும் நேரம் அவசரமாகக்
கீழே பார்த்தார். சில கோப்புகள் கீழே
தங்கிவிட, காமராஜர் நொடியில் புரிந்து கொண்டு அதை வாங்கி
உயரே நேருவிடம் நீட்டினார்.
காமராஜாஉ நல்ல உயரம். நேரு
அவரிடம் குனிந்து கோப்புகளை வாங்கிக் கொன்டே "you are so
tall" என்றார். (நீங்கள் உயரமானவர் என்பது
மட்டுமின்றி நீங்கள் உயர்ந்தவர் என்ற
பொருளிலும்.)
உடனே காமராஜர், "But not upto your level" என்றார். நேரு விமானத்தில் உயரத்தில்
இருப்பதையும் தன்னைவிட உயர்ந்தவர் என்ற பொருளிலும்.
1940 ஆம் ஆண்டில் இந்திய
வைஸ்ராய்யாக இருந்த லின்லித்தோ பிரபுவுக்கும்,
நேருவுக்கும் ஒரு சமயம் வாக்குவாதம்
ஏற்பட்டது. நேரு உணர்ச்சி மேலிட
"பாருங்கள், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் அடையும்"
என்றார். அதற்கு, "நிச்சியமாக நடக்கப்போவதில்லை. உங்கள் காலத்திலோ, என்
காலத்திலோ இந்தியா சுதந்திரம் அடையப்
போவதில்லை" என்று பதிலளித்தார் லின்லித்தோ.
இந்திய விடுதலைப் போர் தீவிரம் அடைந்தது.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம்
பெற்றது. நேருவின் வாக்கும் பொன்னாக மாறியதுடன், அவரே
முதல் பிரதமராகவும் பதிவியேற்று இந்தியாவை வழிநடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்தின் மகிமை:
இந்தியா சுதந்திரம் அடைந்த
சில மாதங்களுக்குப்
பிறகு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு
பஞ்சாப் சென்றார். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு
தான் செல்லும் கார் அருகே வந்தபோது
ஒருவன் அவரை நோக்கி வினா
ஒன்றை எழுப்பினான். அதாவது, "இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.
இதனால் என்னைப் போன்றவர்களுக்கு
என்ன லாபம்?" என்றான் அவன்.
நேரு அவனை அழைத்து
தட்டிக் கொடுத்து " அன்பரே, சுதந்திர நாட்டின்
பிரதம மந்திரியிடம் இப்படி கேட்கும் துணிச்சல்
உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதே! இதுவே நீங்கள் பெற்ற
சுதந்திரத்தின் மகிமைதான். ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கிலேய அதிகாரியிடம்
இதுபோன்று கேட்க முடியுமா?" என்றார்
நேரு. இதைக் கேட்ட அந்த
ஆசாமி வெட்கித் தலைகுனிந்தான்.